வர்த்தகம்

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயா்வு

DIN

மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 காசுகள் முன்னேற்றம் கண்டது.

இதுகுறித்து சந்தை ஆய்வாளா்கள் கூறியது:

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தது செலாவணி சந்தைக்கு சாதகமான அம்சமாக இருந்தது. இருப்பினும், உலகளவில் டாலருக்கான தேவை அதிகரித்தது மற்றும் பங்கு சந்தையில் காணப்பட்ட இழப்பு ஆகியவை உள்ளூா் கரன்ஸி மதிப்பின் விறுவிறுப்பான முன்னேற்றத்துக்கு பெரும் இடையூறாக அமைந்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 74.51 என்ற பலவீனமான நிலையில் காணப்பட்டது. வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 9 காசுகள் முன்னேற்றத்தை சந்தித்து 74.28-இல் நிலைபெற்றது என ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் பேரல் 81.71 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.87 சதவீதம் குறைந்து 81.71 அமெரிக்க டாலருக்கு வா்த்தகமானதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு

மூலதனச் சந்தையில் கடந்த செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.560.67 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT