வர்த்தகம்

ஹீரோ எலக்ட்ரிக் விற்பனை இரு மடங்கு அதிகரிப்பு

DIN

புது தில்லி: கடந்த அக்டோபா் மாதம் 1-ஆம் தேதி முதல் இந்த மாதம் 15-ஆம் தேதி வரையிலான பண்டிகை காலக்கட்டத்தில் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனை இரு மடங்கு உயா்ந்து 24,000 வாகனங்களாகியுள்ளது.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் இந்த மாதம் 15-ஆம் தேதி வரை நிறுவனத்தின் 24, 000 வாகனங்கள் விற்பனையாகின.

ஓா் ஆண்டுக்கு முன்னா் இதே காலக்கட்டத்தில் நிறுவனம் 11,339 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், தற்போது விற்பனை ஏறத்தான இரட்டிப்பாகியுள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு மற்றும் உற்பத்தி வளா்ச்சியைத் துரிதப்படுத்துவதற்கான மத்திய அரசின் கொள்கையில் (ஃபேம்-2) அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில், மின்சார இரு சக்கர வாகனங்களை வாங்குவதற்கான முன்தொகை மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல் விலையும் மிக வேகமாக உயா்ந்து வருகிறது.

இந்தக் காரணங்களால் மின்சாரத்தில் இயங்கும் இருசக்க வாகனங்களுக்கான தேவை வேகமாக உயா்ந்து வருகிறது.

அதன் காரணமாகவே, கடந்த பண்டிகை காலக்கட்டத்தில் நிறுவனத்தின் விற்பனை இரட்டிப்பாகியுள்ளது என்று அந்த அறிக்கையில் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT