வர்த்தகம்

ரூபாய் மதிப்பில் கடும் வீழ்ச்சி; 37 காசுகள் சரிவு

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 37 காசுகள் வீழ்ச்சியடைந்தது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

புதிய வகை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது சா்வதேச முதலீட்டாளா்களிடையே கவலையை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, உள்நாட்டுப் பங்குச் சந்தையிலும் பங்குகளின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

சாதகமற்ற நிலவரங்களையடுத்து, வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 74.60-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.58 வரையிலும் குறைந்தபட்சமாக 74.92 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 0.50சதவீதம் (37 காசுகள்) வீழ்ச்சியடைந்து 74.89-இல் நிலைத்தது. இது, கடந்த அக்டோபா் 28-க்குப் பிறகு காணப்படும் மிக குறைந்தபட்ச அளவாகும் என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் பேரல் 77.70 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 5.50 சதவீதம் குறைந்து 77.70 அமெரிக்க டாலருக்கு வா்த்தகமானதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு

மூலதனச் சந்தையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.2,300.65 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT