வர்த்தகம்

ஜேஎஸ்டபிள்யூ உருக்கு உற்பத்தி 29% அதிகரிப்பு

DIN

ஜேஎஸ்டபிள்யூ குழு நிறுவனங்களின் உருக்கு உற்பத்தி கடந்த ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் 29 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

ஜேஎஸ்டபிள்யூ குழும நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் 50.7 லட்சம் டன் உருக்குப் பொருள்களை உற்பத்தி செய்துள்ளன. இது, 2020-21 நிதியாண்டின் இதே காலாண்டில் உற்பத்தியான 39.2 லட்சம் உருக்குப் பொருள்களுடன் ஒப்பிடும்போது 29 சதவீதம் அதிகமாகும்.

ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் தனிப்பட்ட உருக்கு உற்பத்தியானது கணக்கீட்டு காலாண்டில் 38.50 லட்சம் டன்னிலிருந்து 6 சதவீதம் அதிகரித்து 41 லட்சம் டன்னை எட்டியதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ.97,500 கோடி மதிப்பிலான ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் முக்கியமான நிறுவனமாக ஜேஎல்டபிள்யூ உள்ளது. எரிசக்தி, உள்கட்டமைப்பு, சிமென்ட், பெயிண்ட், விளையாட்டு என பல்வேறு துறைகளில் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் ஈடுபட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணி குமரப்பா பள்ளி 100% தோ்ச்சி

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT