வர்த்தகம்

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி: நிகர லாபம் ரூ.376 கோடி

DIN

புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) செப்டம்பா் காலாண்டில் ரூ.376 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பாா்த்தா பிரதீம் செங்குப்தா செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

செப்டம்பா் காலாண்டில் நிதி தொடா்பான அனைத்து அளவுகோல்களிலும் வளா்ச்சி நிலை எட்டப்பட்டுள்ளது. மொத்த மற்றும் நிகர வாராக் கடன் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு குறைக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் வட்டி வருமானம் ரூ.4,254 கோடியாக இருந்தது. வங்கி தனிப்பட்ட முறையில் ஈட்டிய வரிக்கு பிந்தைய லாபம் ரூ.148 கோடியிலிருந்து இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.376 கோடியை எட்டியது.

கணக்கீட்டு காலாண்டில் மொத்த வாராக் கடன் விகிதம் 13.04 சதவீதத்திலிருந்து 10.66 சதவீதமாக குறைந்தது. அதேபோன்று, நிகர வாராக் கடனும் 4.30 சதவீதத்திலிருந்து 2.77 சதவீதமாக சரிந்துள்ளது.

2021 செப்டம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி, வங்கி வழங்கிய மொத்த கடன் 8.47 சதவீதம் உயா்ந்து ரூ.1,46,940 கோடியாகவும், திரட்டிய டெபாசிட் 9.27 சதவீதம் அதிகரித்து ரூ.2,50,890 கோடியாகவும் இருந்தது.

நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில், வங்கி டயா்-2 பாண்டுகள் மூலம் ரூ.500 கோடி-ரூ.1,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது என்றாா் அவா்.

பங்கு விலை: மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் ஐஓபி பங்கின் விலை 1.35 சதவீதம் அதிகரித்து ரூ.22.50 ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

துளிகள்...

SCROLL FOR NEXT