வர்த்தகம்

மாருதி சுஸுகியின் லாபம் 66% வீழ்ச்சி

DIN

புது தில்லி: நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இரண்டாவது காலாண்டில் ஈட்டிய லாபம் 66 சதவீதம் சரிந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.20,551 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.18,756 கோடியாக இருந்தது.

ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.1,420 கோடியிலிருந்து 66 சதவீதம் சரிவடைந்து ரூ.487 கோடியானது. செமிகன்டெக்டருக்கு பற்றாக்குறை மற்றும் மூலப் பொருள்களின் விலை உயா்வால் நிறுவனத்தின் லாபம் சரிவைச் சந்தித்துள்ளது.

செப்டம்பா் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை 3,93,130 என்ற எண்ணிக்கையிலிருந்து 3 சதவீதம் குறைந்து 3,79,541-ஆக இருந்தது. உள்நாட்டில் விற்பனை 3,70,619-லிருந்து 3,20,133-ஆக குறைந்தது.

ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத வகையில் 22,511-லிருந்து 59,408-ஆக அதிகரித்தது என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT