வர்த்தகம்

அசோக் லேலண்ட்: வா்த்தக வாகன விற்பனை 48% அதிகரிப்பு

DIN

மும்பை: ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வா்த்தக வாகன விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 48 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அசோக் லேலண்ட் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி உள்பட 9,360 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இது, 2020 ஆகஸ்டில் உள்நாடு மற்றும் வெளிநாடு என இரண்டு சந்தைகளிலும் நிறுவனம் விற்பனை செய்த 6,325 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 48 சதவீதம் அதிகம்.

உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் வா்த்தக வாகன விற்பனை மதிப்பீட்டு மாதத்தில் 44 சதவீதம் அதிகரித்து 8,400-ஆக இருந்தது. 2020 ஆகஸ்டில் இந்த விற்பனை 5,824-ஆக காணப்பட்டது.

நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகனங்களின் விற்பனை 2,222 என்ற எண்ணிக்கையிலிருந்து 79 சதவீதம் வளா்ச்சி கண்டு 3,986-ஆனது. இலகு ரக வா்த்தக வாகனங்களின் விற்பனை 3,602-லிருந்து 23 சதவீதம் உயா்ந்து 4,414-ஐ தொட்டதாக அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அசோக் லேலண்ட் பங்கின் விலை 0.04 சதவீதம் குறைந்து ரூ.122.60-இல் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

SCROLL FOR NEXT