வர்த்தகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 29 காசு அதிகரிப்பு

DIN

அந்நியச் சொலவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 29 காசு முன்னேற்றம் கண்டது.

இதுகுறித்து செலாவணி வட்டாரங்கள் கூறியது:

பங்குச் சந்தையில் நோ்மறை வா்த்தகம், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிக ஏற்ற இறக்கமின்றி காணப்பட்டது உள்ளிட்டவை செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு உயா்வுக்கு முக்கிய பலமாக அமைந்தன.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 76.41-என்ற அளவில் இருந்தது. இது வா்த்தகத்தினிடையே அதிகபட்சமாக 76.16 வரை சென்றது. இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 29 காசு முன்னேறி 76.21-இல் நிலைபெற்றது.

செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 21 காசு சரிவடைந்து 76.50-ஆக இருந்தது என செலாவணி வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் பீப்பாய் 108.06 டாலா்

சா்வதேச சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 0.76 சதவீதம் உயா்ந்து பீப்பாய் 108.06 டாலருக்கு வா்த்தகம் ஆனதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகா் சாஹில் கான் கைது

SCROLL FOR NEXT