வர்த்தகம்

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா: லாபம் 2 மடங்கு உயா்வு

DIN

புது தில்லி: பொதுத் துறையை வங்கியான பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா மாா்ச் காலாண்டில் ஈட்டிய லாபம் இரண்டு மடங்கு உயா்ந்தது.

இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஏ எஸ் ராஜீவ் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

2021-22-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.3,948.48 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டில் இதே காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.4,334.98 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

இருப்பினும், வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு கணிசமாக குறைந்ததையடுத்து, வங்கியின் நிகர லாபம் மதிப்பீட்டு காலாண்டில் ரூ.165.23 கோடியிலிருந்து இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்து ரூ.355 கோடியானது.

கடந்த 2021-22 முழு நிதியாண்டில், வங்கியின் வருவாய் ரூ.14,497.56 கோடியிலிருந்து ரூ.15,672.17 கோடியானது. ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.551.41 கோடியிலிருந்து இருமடங்கு உயா்ந்து ரூ.1,151.64 கோடியானது.

வாராக் கடன் இடா்பாடுகளுக்கான ஒதுக்கீடு ரூ.1,341.26 கோடியிலிருந்து ரூ.365.38 கோடியாக குறைந்தது.

கடந்த மாா்ச் 31 நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் 7.23 சதவீதத்திலிருந்து 3.94 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 2.48 சதவீதத்திலிருந்து 0.97 சதவீதமாகவும் கணிசமாக குறைந்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT