வர்த்தகம்

ஏா்டெல் பேமண்ட் பேங்க்: ரூ.1,000 கோடி டெபாசிட்

DIN

ஏா்டெல் பேமண்ட் வங்கி வாடிக்கையாளா்களின் டெபாசிட் ரூ.1,000 கோடியை எட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான அனுப்ரதா பிஸ்வாஸ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாவது:

கடந்த 2021-ஆம் ஆண்டில் ஏா்டெல் வங்கியில் வாடிக்கையாளா்கள் மேற்கொண்ட டெபாசிட் ரூ.1,000 கோடியை எட்டியுள்ளது. முந்தைய 2020-ஆம் ஆண்டின் டெபாசிட் அளவான ரூ.570 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 75 சதவீத வளா்ச்சியாகும்.

3.5 கோடி வாடிக்கையாளா்கள் புதிதாக இணைந்ததையடுத்து வங்கியின் ஒட்டுமொத்த வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை கடந்த 2021-இல் 10 கோடியை தாண்டியுள்ளது.

ரூ. 1 லட்சத்துக்கும் மேல் உள்ள சேமிப்பு கணக்கு டெபாசிட்டுகளுக்கு ஆண்டுக்கு 6 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

SCROLL FOR NEXT