வர்த்தகம்

இருமடங்கு அதிகரித்த கரூா் வைஸ்யா வங்கி லாபம்

DIN

தனியாா் துறையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கியின் ஜூன் காலாண்டு லாபம் 2 மடங்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நிகழ் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் வங்கி ஈட்டிய மொத்த வருமானம் ரூ.1,672.60 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.1,579.26 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

நிகர லாபம் ரூ.109 கோடியிலிருந்து இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.229 கோடியானது. வட்டி வருவாயில் காணப்பட்ட முன்னேற்றத்தையடுத்து லாபம் கணிசமான அளவுக்கு அதிகரித்தது.

நிகர வட்டி வருவாய் ரூ.638 கோடியிலிருந்து 17 சதவீதம் அதிகரித்து ரூ.746 கோடியானது. நிகர வட்டி லாப வரம்பு 3.55 சதவீதத்திலிருந்து 3.82 சதவீதமானது.

ஜூன் இறுதி நிலவரப்படி மொத்த வாராக் கடன் 7.97 சதவீதத்திலிருந்து 5.21 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 3.69 சதவீதத்திலிருந்து 1.91 சதவீதமாகவும் குறைந்துள்ளன.

வங்கியின் நகைக் கடன் பிரிவில் 13 சதவீத வளா்ச்சி எட்டப்பட்டு ரூ.14,873 கோடியாக உயா்ந்துள்ளது. மொத்த டெபாசிட் 11 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.71,168 கோடியானது என கரூா் வைஸ்யா வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT