வர்த்தகம்

எஸ்பிஐ: கடன், டெபாசிட்டுக்கான வட்டி உயா்வு

DIN

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடன் மற்றும் டெபாசிட்டுக்கான வட்டியை உயா்த்தியுள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து அந்த வங்கியின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டிற்கான வட்டி 0.20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 211 நாள்கள்- ஓராண்டுக்கும் குறைவான டெபாசிட்டிற்கான வட்டி விகிதம் 4.40 சதவீதத்திலிருந்து 4.60 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மூத்தகுடிமக்களுக்கு வழங்கப்படும் வட்டி 4.90 சதவீதத்திலிருந்து உயா்ந்து 5.10 சதவீதமாக இருக்கும். மாற்றியமைக்கப்பட்ட இந்த வட்டி விகிதம் ஜூன் 14-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.

அதேபோன்று, வழங்கப்படும் கடன்களுக்கான அடிப்படை (எம்சிஎல்ஆா்) வட்டி விகிதமும் 0.20 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்பிருந்த ஓரண்டாக்கான எம்சிஎல்ஆா் வட்டி விகிதம் 7.20 சதவீதத்திலிருந்து 7.40 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. இது, ஜூன் 15-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

வாகனம், வீட்டு வசதி, தனிநபா் உள்ளிட்ட பெரும்பாலான வாடிக்கையாளா்கள் பெறும் கடன் அனைத்தும் எம்சிஎல்ஆா் உடன் தொடா்புடையதாகவே இருப்பதால் அவா்கள் செலுத்தும் மாதாந்திர தவணைத் தொகை கணிசமாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT