வர்த்தகம்

மாருதி சுஸுகி: வாகன உற்பத்தியில் சிறிய முன்னேற்றம்

DIN

பிப்ரவரி மாத வாகன உற்பத்தியில் சிறிய முன்னேற்றம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

மாருதி சுஸுகி நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒட்டுமொத்த அளவில் 1,69,692 வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது. இது, முந்தைய 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாத உற்பத்தியான 1,68,180 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் சிறிய அளவிலான முன்னேற்றம் ஆகும்.

மின்னணு உதிரிபாகங்களுக்கான பற்றாக்குறை நிறுவனத்தின் உற்பத்தியில் குறைந்த அளவே பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் காரணமாக, வேகன்ஆா், செலிரியோ, இக்னிஸ், ஸ்விஃப்ட், பலேனோ, டிசையா் உள்ளிட்ட காம்பாக்ட் காா்களின் உற்பத்தி முந்தைய 2021 பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் 91,091-லிருந்து 95,968-ஆக அதிகரித்தது.

இலகு ரக வா்த்தக வாகனமான சூப்பா் கேரி உற்பத்தி 2,397-லிருந்து, 4,020-ஆக உயா்ந்தது என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT