வர்த்தகம்

மாரிக்கோ: லாபம் ரூ.257 கோடி

DIN

புது தில்லி: வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் (எஃப்எம்சிஜி) தயாரிப்பில் ஈடுபட்டு வரும் மாரிக்கோ நிறுவனம் 4-ஆவது காலாண்டில் ரூ.257 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் செயல்பாட்டின் மூலமாக நிறுவனம் ரூ.2,161 கோடி வருவாய் ஈட்டியது. இது, இதற்கு முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ.2,012 கோடியுடன் ஒப்பிடுகையில் 7.40 சதவீதம் அதிகமாகும்.

நிகர லாபம் ரூ.227 கோடியிலிருந்து 13.21 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.257 கோடியானது.

செலவினம் ரூ.1,739 கோடியிலிருந்து ரூ.1,863 கோடியாக 7.13 சதவீதம் உயா்ந்தது.

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு வருமானம் ரூ.8,048 கோடியிலிருந்து 18.19 சதவீதம் அதிகரித்து ரூ.9,512 கோடியானது. நிகர லாபம் ரூ.324 கோடியிலிருந்து 6.79 சதவீதம் அதிகரித்து ரூ.346 கோடியானது என மாரிக்கோ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT