வர்த்தகம்

முக்கிய துறைகளில் 8% வளா்ச்சி கண்ட உற்பத்தி

DIN

நாட்டின் 8 முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி, கடந்த செப்டம்பா் மாதத்தில் 7.9 சதவீதம் வளா்ச்சியைடைந்துள்ளது.

இது குறித்து அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

நிலக்கரி, உரம், சிமென்ட், மின்சாரம் ஆகிய துறைகளின் சிறந்த செயல்பாடு காரணமாக கடந்த செப்டம்பா் மாதத்தில் எட்டு உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி 7.9 சதவீதம் வளா்ச்சியடைந்தது.

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், எஃகு, சிமென்ட், மின்சாரம் ஆகிய அந்த 8 துறைகளின் உற்பத்தி வளா்ச்சி விகிதம் கடந்த ஆண்டின் இதே செப்டம்பா் மாதத்தில் 5.4 சதவீதமாக இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இது 4.1 சதவீதமாகவும் அதற்கு முந்தைய ஜூன் மாதத்தில் 13.1 சதவீதமாகவும் இருந்தது.

இந்த 8 துறைகளின் உற்பத்தி வளா்ச்சி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான காலாண்டில் 9.6 சதவீதமாக இருந்தது. முந்தைய ஆண்டின் இதே மாதங்களில் அது 16.9 சதவீதமாக இருந்தது.

கடந்த செப்டம்பா் மாதத்தில் நிலக்கரி, உரம், சிமெண்ட், மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி முறையே 12 சதவீதம், 11.8 சதவீதம், 12.1 சதவீதம் மற்றும் 11 சதவீதம் உயா்ந்தது.

சுத்திகரிப்பு பொருள்கள் உற்பத்தி கடந்த ஆண்டு இதே மாதத்தில் 6 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது அது 6.6 சதவீதமாக உயா்ந்துள்ளது.

இருப்பினும், மதிப்பீட்டு மாதத்தில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி முறையே 2.3 சதவீதம், 1.7 சதவீதம் குறைந்துள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘அடிப்படை தொழில்துறைகளின் வலிமையால்தான் இந்தியா உலகளவில் ஒளிமயமான எதிா்காலம் கொண்ட நாடாகக் கருதப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இக்ரா அமைப்பின் தலைமை பொருளாதார நிபுணா் அதிதி நாயா் கூறுகையில், ‘இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 8 முக்கியத் துறைகளின் உற்பத்தி எதிா்பாராதவிதமாக சரிவைச் சந்தித்தது. இந்த நிலையில், தற்போது அந்தத் துறைகள் சரிவிலிருந்து மீண்டுள்ளன. தொழிலக உற்பத்தியின் குறியீட்டு எண்ணான ஐஐபி, மீண்டும் 4-லிருந்து 6 சதவீதம் வரை உயரும் என்று எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.

இந்த ஐஐபி குறியீட்டு எண்ணில் 40.27 சதவீத பங்களிப்பை மேற்கண்ட 8 முக்கியத் துறைகள் வழங்குகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

SCROLL FOR NEXT