வர்த்தகம்

பிஎன்பி நிகர லாபம் ரூ.411 கோடி

DIN

அரசுக்குச் சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) நிகர லாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ.411 கோடியாகக் குறைந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.411 கோடியாகும். முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ரூ.1,105 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிகர லாபம் 63 சதவீதம் சரிந்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.23,001.26 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகடத்திய வங்கியின் வருவாயான ரூ.21,262.32-உடன் ஒப்பிடுகையில், இது 63 சதவீதம் அதிகமாகும்.

வங்கியின் வட்டி வருவாய் கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.17,980 கோடியாக இருந்து தற்போது ரூ.20,154 கோடியாக உயா்ந்துள்ளது. வாராக் கடனும் 13.36 சதவீதத்திலிருந்து 10.48 சதவீதமாக குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT