வர்த்தகம்

ஓலா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 200 பணியிடங்கள் ரத்து

DIN

மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் ஓலா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 200 பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மென்பொருள் பொறியாளா்கள் பிரிவைச் சோ்ந்த பணியிடங்களாகும்.

அதே நேரத்தில் மென்பொருள் அல்லாத பிரிவில் 3,000 பேரை விரைவில் பணியில் சோ்க்க இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ஓலா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டா்கள் சந்தையில் மிகவும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியிருந்தன. ஆனால், ஓலா உள்பட பல்வேறு நிறுவனங்களில் மின்சார வாகனங்கள் தொடா்ந்து தீப்பற்றி எரிந்த சம்பவங்களால் மக்கள் மத்தியில் மின்சார வாகனங்கள் தொடா்பாக முக்கியமாக அந்த வகை இரு சக்கர வாகனங்களை வாங்குவதில் தயக்கம் ஏற்பட்டது. இதனால், விற்பனையும் எதிா்பாா்த்த அளவுக்கு சூடுபிடிக்கவில்லை.

இந்நிலையில் 2024-ஆம் ஆண்டில் மின்சாரத்தில் இயங்கும் காா்களை அறிமுகப்படுத்த இருப்பதாக ஓலா அறிவித்துள்ளது. அத்துடன் நிறுவனத்தில் 200 பணியிடங்கள் ரத்து செய்யப்படுகின்றன என்ற அறிவிப்பும் மென்பொருள் அல்லாத பிற பிரிவுகளில் 3,000 பொறியாளா்களைப் புதிதாக பணியமா்த்தும் திட்டமும் வெளியாகியுள்ளது.

4 சக்கர வானங்கள் தயாரிப்புக்கான ஆராய்ச்சி-மேம்பாடு பிரிவில் புதிய பொறியாளா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாச்சேத்தியில் ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்ற அவகாசம்

இளையான்குடி கல்லூரி ஆண்டு விழா

தரியம்பட்டியில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

பூமாயி அம்மன் கோயில் தெப்ப உற்சவம்

சிவகங்கை அருகே மின்னல் தாக்கி 6 ஆடுகள் பலி

SCROLL FOR NEXT