வர்த்தகம்

செயில் நிகர லாபம் 65 சதவீதம் வீழ்ச்சி

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த ஸ்டீல் அத்தாரிடி ஆஃப் இந்தியா (செயில்) நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் 65 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.542.18 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.1,528.54 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிகர லாபம் 65 சதவீதம் சரிந்துள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவினங்கள் ரூ.24,825.11 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்திய மொத்த செலவினங்களான ரூ.23,209.88 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும்.

எனினும், 2021-ஆம் நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் ரூ.25,398.37 கோடியாக இருந்த நிறுவனத்தின் வருவாய், நடப்பு நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.25,140.16 கோடியாகக் குறைந்துவிட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT