வர்த்தகம்

இந்தியாவின் இயற்கை எரிவாயு தேவை நடப்பாண்டில் 6 சதவிகிதம் ஆக உயரும்!

DIN

புது தில்லி : இந்தியாவின் இயற்கை எரிவாயு தேவை, நடப்பாண்டில் 6 சதவிகிதம் ஆக உயரும் என்று சர்வதேச ஆற்றல் முகமை  கணித்துள்ளது.

தொழிற்சாலைகளில் அதிகரித்து வரும் எரிவாயு பயன்பாடு மற்றும் மின் உற்பத்தி துறைகளில் அதிகளவு எரிவாயு பயன்படுத்தப்படுவது   இதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.   

இந்தியாவின் இயற்கை எரிவாயு தேவை 2023ல் 64 பில்லியன் கன மீட்டராக உயர்ந்துள்ளது.

திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) இறக்குமதி கடந்த ஆண்டு  7 சதவிகிதம் அதிகரித்து,  29 பில்லியன் கன மீட்டர் ஆக உயர்ந்துள்ளது. உள்நாட்டு எல்என்ஜி உற்பத்தி 6 சதவீதம் அதிகரித்து, 35 பில்லியன் கன மீட்டர் ஆக உயர்ந்துள்ளது.

மின் உற்பத்தி துறை மற்றும் உர தொழிற்சாலைகளில் எரிவாயு தேவை அதிகரிப்பால், நடப்பாண்டுக்கான எல்என்ஜி இறக்குமதி 7 சதவிகிதம் அதிகரிக்கும் என்று சர்வதேச ஆற்றல் முகமை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எரிவாயு இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையாக, தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம், அரசால் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், 2030-ஆம் ஆண்டுக்குள், ஓராண்டுக்கு குறைந்தபட்சம் 5 மில்லியன் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

SCROLL FOR NEXT