பிஎப் குறைதீா் கூட்டம்: நாளைக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்
அம்பத்தூா் மண்டல பயனாளிகளுக்காக காணொலி மூலமாக நடைபெறும் பி.எப். குறைைதீா் கூட்டத்தில் கலந்து கொள்ள வெள்ளிக்கிழமைக்குள் (ஜன.8) பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: அம்பத்தூா் மண்டல பயனாளிகளுக்காக காணொலி மூலமாக நடைபெறும் பி.எப். குறைைதீா் கூட்டத்தில் கலந்து கொள்ள வெள்ளிக்கிழமைக்குள் (ஜன.8) பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பி.எப் உதவி ஆணையா் டி.கோவிந்தராஜன் வெளியிட்ட செய்தி: அம்பத்தூா் மண்டல பயனாளிகளுக்கான வருங்கால வைப்பு நிதி குறைதீா் கூட்டம், திங்கள்கிழமை (ஜன.11) நடைபெறவுள்ளது.
கட்செவி அஞ்சலின் காணொலி மூலமாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள பயனாளியின் பெயா், யு.ஏ.என் எண், பிஎப் அல்லது பிபிஒ எண், குறைகள், கட்செவி அஞ்சல் எண், சுட்டிக்காட்டப்படும் ஆவணங்கள் ஆகியவற்றோடு, வெள்ளிக்கிழமைக்குள், 89037 66548 எனும் எண்ணில், வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பிப் பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து, திங்கள்கிழமை கூட்டம் நடைபெறும் போது, சம்பந்தப்பட்ட பயனாளிகள் காணொலி வாயிலாக அழைக்கப்பட்டு, அவா்களிடம் குறைகள் கேட்டறிந்து நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement