முகப்பு
சினிமா

பொங்கல் பண்டிகைக்கு 5 படங்கள் ரிலீஸ்

சென்னை, ஜன.8: முதல்வர் கருணாநிதி கதை, வசனத்தில் உருவாகியுள்ள "இளைஞன்', சன் பிக்சர்ஸ் வெளியிடும் "ஆடுகளம்' உள்ளிட்ட ஐந்து படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகின்றன.  இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 2010-ம்

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:03 PM
பகிர்:

சென்னை, ஜன.8: முதல்வர் கருணாநிதி கதை, வசனத்தில் உருவாகியுள்ள "இளைஞன்', சன் பிக்சர்ஸ் வெளியிடும் "ஆடுகளம்' உள்ளிட்ட ஐந்து படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகின்றன.

 இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 2010-ம் ஆண்டில் 145 நேரடித் தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின. அரசின் மானியப் பட்டியலில் இடம் பிடிப்பதற்காக சிறு, குறு படங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வெளிவந்ததால், 2011-ம் ஆண்டின் முதல் வாரத்தில் ஒரு சில படங்களே வெளிவந்தன. இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு ஐந்து படங்கள் வெளியாகின்றன. கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடித்துள்ள "இளைஞன்', சித்திக் இயக்கத்தில் விஜய் - அசின் நடித்துள்ள "காவலன்', கார்த்தி - தமன்னா நடித்துள்ள "சிறுத்தை', "ஆடுகளம்', புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள "கருத்தக்கண்ணன் ரேக்ளா ரேஸ்' ஆகிய படங்கள் ரிலீசாகின்றன.

 இதில் "இளைஞன்' மட்டும் அதிகப்படியாக 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. "ஆடுகளம்' 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. மீதமுள்ள திரையரங்குகளை "காவலன்', "சிறுத்தை' ஆகிய படங்கள் பகிர்ந்து கொள்வதால் இந்த முறையும் சிறு படங்களை வெளியிட முடியாத நிலை உருவாகியிருப்பதாக தயாரிப்பாளர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →