நடிகர்களின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு போலீஸ் தரப்பில் அனுமதி
வரும் வரும் 7-ம் தேதி மேற்கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு போலீஸ் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு விதித்துள்ள சேவை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்த் திரையுலகினர் வரும் வரும் 7-ம் தேதி மேற்கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு போலீஸ் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறை, திரைப்படத் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் ஏனைய திரைப்படத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பிரிவினருக்கும் மத்திய அரசு, 12.3 சதவீதம் சேவை வரி விதித்துளளது. இந்த சேவை வரி கடந்த ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு தமிழ் திரையுலகத்தினரிடம் இருந்து கடும எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள இந்த சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் இல்லாவிடல் இதனை கண்டித்து வரும் 7-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அறிவித்தபடி நாளை மறுநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இதற்காக போலீஸ் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்து நடிகர், நடிகைகளும் பங்கேற்க வேண்டும் என்று நடிகர் சங்க தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அன்றைய தினம் படப்பிடிப்புகள் நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சேவை வரியை கண்டித்து நடக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், பெப்சி தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
இதற்காக வள்ளுவர் கோட்டம் எதிரில் பந்தல் அமைக்கப்படுகிறது. உண்ணாவிரதத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கும் உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.