முகப்பு
சினிமா

சமீரா ரெட்டிக்கு இன்று மாலை திடீர் திருமணம்

பிரபல நடிகை நடிகை சமீரா ரெட்டிக்கும் அவரது காதலருக்கும் இன்று மாலையே அவசர அவசரமாக திருமணம் நடக்கிறது. கர்நாடகத்தைச் சேர்ந்த சமீரா ரெட்டி  இந்தியில் முன்னணி நடிகையாகத் திகழ்கிறார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

 பிரபல நடிகை நடிகை சமீரா ரெட்டிக்கும் அவரது காதலருக்கும் இன்று மாலையே அவசர அவசரமாக திருமணம் நடக்கிறது. கர்நாடகத்தைச் சேர்ந்த சமீரா ரெட்டி  இந்தியில் முன்னணி நடிகையாகத் திகழ்கிறார். மேலும் தமிழ், தெலுங்கிலும் இவர் பிரபலம். தமிழில் வாரணம் ஆயிரம், அசல், வேட்டை, வெடி உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் அவர் நடித்துள்ளார்.

சமீரா ரெட்டி கடந்த 2 வருடங்களாக தொழில் அதிபரும் மோட்டார் பைக் நிறுவன அதிபருமான அக்‌ஷய் வர்தாவை காதலித்து வந்தார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் 14 ந்தேதி பாந்த்ராவில் உள்ள சமீராவின் வீட்டில் ரகசியமாக நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இவர்களது திருமணம் ஏப்ரல் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் திடீர் திருப்பமாக இன்று மாலை இவர்களது திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருமண விழாவிற்கு நெருங்கிய சொந்தங்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சமீராவிடம் எந்த பதிலும் இல்லை. ஆனால் இதனை சமீராவின் தாயார் நக்ஸ்ரா ரெட்டி உறுதிப்படுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.