முகப்பு
சினிமா

புதிய படங்களில் நடிக்க அஞ்சலிக்கு தடை விதிக்க வேண்டும்: ஆந்திரபிலிம் சேம்பருக்கு 'கில்டு' கடிதம்

மு.களஞ்சியம் தயாரித்து இயக்கி வரும் 'ஊர் சுற்றி புராணம்' படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்து வந்தார். கடந்த ஆண்டு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

மு.களஞ்சியம் தயாரித்து இயக்கி வரும் 'ஊர் சுற்றி புராணம்' படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்து வந்தார். கடந்த ஆண்டு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுதது களஞ்சியத்தின் படத்தில் நடிக்க மாட்டேன் என்று நடிகை அஞ்சலி அறிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த களஞ்சியம் அஞ்சலி மீது தென்னிந்திய திரைப்படம் மற்றும் சின்னத்திரை பட அதிபர்கள் சங்கத்தில் (கில்டு) புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட 'கில்டு' செயலாளர் ஜாக்குவார் தங்கம், ஆந்திர மாநில பிலிம்சேம்பர் தலைவர் மற்றும் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

''மு.களஞ்சியம் தயாரித்து டைரக்டு செய்யும் 'ஊர் சுற்றி புராணம்' படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு 2013-ம் ஆண்டில் அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டார். படத்தில் நடிப்பதற்கு அஞ்சலி சம்மதித்ததுடன் 2013 மார்ச் மாதம் 10 நாட்கள் நடித்தார். அதன்பிறகு அவருக்கு ஏற்பட்ட சொந்த பிரச்சினை காரணமாக அஞ்சலி, 'ஊர் சுற்றி புராணம்' படத்தில் நடிக்க மறுக்கிறார். இதனால் களஞ்சியத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. அவர் கோடிக்கணக்கில் கடன் வாங்கி படம் எடுத்து வருகிறார். அஞ்சலி, 'கால்ஷீட்' கொடுக்காததால், களஞ்சியத்தின் நிலைமை பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது.

அஞ்சலி ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்ட 'ஊர் சுற்றி புராணம்' படத்தில் நடிக்காமல், புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். 'கீதாஞ்சலி' என்ற தெலுங்கு படத்திலும், 'தீரா ராணா விக்ரமா' என்ற கன்னட படத்திலும் நடிக்க சம்மதித்து இருக்கிறார். களஞ்சியத்தின் 'ஊர் சுற்றி புராணம்' படத்தை முடித்துக்கொடுக்காமல், வேறு எந்த புதிய படத்திலும் அஞ்சலி நடிக்கக்கூடாது. இதை தெலுங்கு பட அதிபர்களுக்கு தெரிவித்து, அஞ்சலி புதிய படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும்.''இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →