முகப்பு
சினிமா

என்னைப் பற்றி வதந்தி பரப்பினால் சட்ட நடவடிக்கை: நயன்தாரா எச்சரிக்கை

தன்னை பற்றி வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்று நயன்தாரா எச்சரித்துள்ளார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:41 AM
பகிர்:

தன்னை பற்றி வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்று நயன்தாரா எச்சரித்துள்ளார்.

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கும் திரைப்படம் "தனியொருவன்". இந்த படத்தில் நயன்தாரா போலீஸ் அதிகாரி வேடத்தில் வருகிறார். படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் கணேஷ் வெங்கட்ராமன். படத்தில் நயன்தாராவின் நண்பராக நடித்து வருகிறார்.

நெருங்கிய நண்பர்களாக நடிக்கும் இருவரும் உண்மையில் நெருங்கி பழகுவதாகவும், பல மணி நேரம் தனிமையில் பேசிக்கொள்வதாகவும், பட யூனிட்டில் உள்ள யாரோ சிலர் வதந்தியை பரப்பிவிட்டுள்ளனர்.

இந்த வதந்தி நயன்தாராவிற்கு தெரிந்தபோது கடும் கோபம் அடைந்தார்.  தன்னைப்பற்றி தேவையில்லாத வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →