சைவம் படத்திற்காக முடியை இழந்த நாசர்
நவரச நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்வதில் வல்லவர் நாசர். படத்தில் தனது கதாபாத்திறத்திற்கு ஏற்ப தனது உ
நவரச நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்வதில் வல்லவர் நாசர். படத்தில் தனது கதாபாத்திறத்திற்கு ஏற்ப தனது உடல் மற்றும் முக மொழிகளை மாற்றி கொண்டு நடிப்பார்.
அந்த வகையில் இயக்குநர் விஜயின் சைவம் படத்தில் முதியவர் கதாபத்திரத்திற்கு பாதி வழுக்கை விழுந்தவராக அவர் தோற்றம் இருக்க வேண்டியதிருந்தது. இதற்காக தனது முடியை குறைத்துள்ள நாசர், அசல் வழுக்கை தலையுடைய முதியவர் போன்று தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு நடித்துள்ளார்..
அதே நேரத்தில் மற்றபடங்களில் நாசரின் தோற்றம் பாதிக்கமால் இருக்க நாசரின் முடிபோன்ற அசல்விக் ஒன்றை ஒப்பனை கலைஞரும், அலங்கார நிபுணருமான பட்டணம் ரஷீத் செய்துள்ளார். இதனை பயன்படுத்தி மற்ற படங்களில் அவர் நடித்துள்ளார்.