'தூள்' படத்தின் மூலமாக மிகவும் பிரபலம் அடைந்தவர் பரவை முனியம்மா. தமிழில் இதுவரை 25 படங்களில் நடித்துள்ளார். நாட்டுப்புறப் பாடகியும், திரைப்பட நடிகையுமான அவர், தற்போது ஏழ்மையில் வாடுவதோடு உடல்நலக் குறைவாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.
பட வாய்ப்புகள் மற்றும் பாடும் வாய்ப்புகள் குறைந்ததால் சாப்பாடுவதற்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படுவதாகவும், மருந்துகள் வாங்குவதற்கு கூட பணமில்லை என்று பரவை முனியம்மா ஒரு பேட்டியில் கூறினார். இதனால் அவருக்கு உதவ பலர் முன்வந்துள்ளார்கள்.
லதா ஸ்ரீனிவாசன் என்கிற பத்திரிகையாளர், பரவை முனியம்மாவுக்கு தனது ஃபேஸ்புக் மூலமாக நிதி திரட்டி வருகிறார். இதுவரை பலருடைய கருணையால் 1 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக அவர் கூறுகிறார். இதுபற்றி அவர் கூறும்போது:
ஒரு மகன், இரண்டு பேரக்குழந்தைகள் ஆகியோருடன் இணைந்து வாழும் பரவை முனியம்மா வறுமையில் வாடுகிறார். மகன், பேரக்குழந்தைகளையும் அவர் தான் பார்த்துக்கொள்கிறார். மிகவும் கஷ்டப்படும் அவருக்கு உதவவேண்டும் என்று நினைத்தேன்.
என் ஃபேஸ்புக்கில் 55,000 பேர் ஃபாலோயர்களாக இருக்கிறார்கள். அவர்களின் உதவியுடன் பரவை முனியம்மாவுக்கு உதவி செய்ய முயற்சி செய்கிறேன். ஃபேஸ்புக் நண்பர்களின் உதவியுடன் இதுவரை 1 லட்சம் ரூபாய் வரை திரட்டியுள்ளேன் என்று அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.