முகப்பு
சினிமா

கடவுளுக்கு நன்றி: பெருமூச்சு விடும் சிம்பு! வாலு என்றைக்கு ரிலீஸ்?

கடவுளுக்கு நன்றி. படம் என்றைக்கு வெளியாகும் என்கிற தகவல் விரைவில் தெரிவிக்கப்படும்.

Updated On : 6 ஆகஸ்ட், 2015 at 3:30 PM
பகிர்:

வாலு தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. கடவுளுக்கு நன்றி என்று நடிகர் சிம்பு இன்று ட்வீட் செய்துள்ளார். இதனையடுத்து ஆகஸ்ட் 14 அன்று வாலு வெளியாக உள்ளது.

சிம்பு நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள வாலு படம் ஜூலை 17-ம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிடுவதாக இருந்தது.

இந்த நிலையில், வாலு படத்தின் வெளியீட்டுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று மேஜிக் ரேஸ் நிறுவனம் சார்பில் தொடரப்பட்டது. 'தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநில வெளியீட்டு உரிமையை எங்கள் நிறுவனத்துக்கு வழங்குவதாக 2013-ல் ஒப்பந்தம் போடப்பட்டது. இப்போது வேறு நபர் மூலமாக படத்தை வெளியிட உள்ளார்கள். எனவே வாலு படத்துக்குத் தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement

இது தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடந்ததால் வாலு படம் வெளியாவதில் தடங்கல் ஏற்பட்டது. இந்நிலையில் வாலு படம் தொடர்பான சட்டப் பிரச்னைகள் முடிவுக்கு வந்துள்ளன.

வாலு தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. கடவுளுக்கு நன்றி. படம் என்றைக்கு வெளியாகும் என்கிற தகவல் விரைவில் தெரிவிக்கப்படும். அனைவருடைய வேண்டுதலுக்கும் அன்புக்கும் நன்றி என சிம்பு இன்று ட்வீட் செய்துள்ளார்.

இதனையடுத்து ஆகஸ்ட் 14-ம் தேதி வாலு படம் வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.