முகப்பு
சினிமா

பாகுபலியின் வசூல் மிரள வைக்கிறது: சல்மான் கான்

பாலிவுட்டால் இந்த வசூலைப் பெறமுடியும் என்று தோன்றவில்லை. வசூல் விவரங்கள் அச்சுறுத்துகின்றன.

Updated On : 17 ஜூலை, 2015 at 4:30 PM
பகிர்:

250 கோடி பட்ஜெட்டில் உருவான பாகுபலி படம், 300 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு தெலுங்குப் படம் இந்தளவுக்கு வசூல் செய்வதை பாலிவுட் உலகம் ஆச்சரியத்துடன் கவனித்துக்கொண்டிருக்கிறது.

இது பற்றி பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் கூறும்போது:

யாராவது இந்தச் சாதனையை உடைக்கும்வரை இப்போதைக்கு பாலிவுட்டால் இந்த வசூலைப் பெறமுடியும் என்று தோன்றவில்லை. பாகுபலியின் வசூல் விவரங்கள் அச்சுறுத்துகின்றன. பாகுபலி மிக அருமையான படம். ஆனால் பல பாலிவுட் படங்கள் அதிக வசூல் செய்ததாலேயே, பாகுபலியால் இந்தளவு வசூலைப் பெறமுடிந்தது என்றார்.

Advertisement

சல்மான் கானின் பல படங்களில் 150, 200 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளன. ஆனால் பாகுபலி, வெளியான 3 நாள்களில் 150 கோடி ரூபாய் வசூலைப் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.