புலி கதையை நடிகர் விஜய் ஒப்புக்கொண்டது குறித்து சுவாரசியமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.
இயக்குநர் சிம்புதேவன் விஜய்யிடம் புலி கதையை முதலில் சொன்னபோது அது விஜய்க்கு சரியாகப் படவில்லை. வரலாற்றுக் கதாபாத்திரம் தனக்கு செட் ஆகுமா என்கிற சந்தேகம் இருந்ததால் உடனே ஓகே சொல்லவில்லை.
விஜய்யுடன் சேர்ந்து கதை கேட்ட அவர் மகன் சஞ்சய்க்கு கதை மிகவும் பிடித்துப்போனது. அப்பா இது நீங்கள் பண்ணவேண்டிய படம். கண்டிப்பாக ஹிட் ஆகும் என்று உற்சாகமாகப் பேசியுள்ளான்.
மகன் இவ்வளவு நம்பிக்கையுடன் சொல்லியது மட்டுமில்லாமல், இந்தப் படம் பண்ணினால் நீங்கள் பெருமையடைவீர்கள் என்றும் சொன்னது விஜய்யை மனம் மாற வைத்து சிம்புதேவனுக்கு சம்மதம் சொல்ல வைத்துள்ளது.
புலி படத்தில் விஜய்யுடன் ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதி, சுதீப் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.