ஓய்வு பெறுகிறார் இசையமைப்பாளர் மரகதமணி!
அழகன், நீ பாதி நான் பாதி, வானமே எல்லை, ஜாதி மல்லி போன்ற தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ள மரகதமணி...
பிரபல இசையமைப்பாளர் மரகதமணி அடுத்த வருடம் திரையுலகில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அழகன், நீ பாதி நான் பாதி, வானமே எல்லை, ஜாதி மல்லி போன்ற தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ள மரகதமணி, தெலுங்கில் கீரவாணி என்கிற பெயரில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவர் அடுத்த வருடம் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து ஒரு பேட்டியில் கூறும்போது,
Advertisement
என்னுடைய முதல் பாடலை டிசம்பர் 9, 1989 அன்று சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் பதிவு செய்தேன். அப்போதே ஓய்வு தேதி என டிசம்பர் 8, 2016 நாளை குறித்துவைத்துவிட்டேன். அன்றைய தினத்தை என்னுடைய நெருங்கிய நண்பர்கள், இசைக்கலைஞர்களுடன் கொண்டாட உள்ளேன். பல இயக்குநர்கள் ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்ள மாட்டார்கள். அதனால் தான் என்னைப் புரிந்துகொண்ட இயக்குநர்களிடம் மட்டுமே பணிபுரிந்தேன். அதனால் தான் வருடா வருடம் நான் பண்ணுகிற படங்களின் எண்ணிக்கை குறைந்து போயின. அதனால் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. நான் ஒரே நாளில் ஓய்வு பெறவில்லை. படிப்படியாகவே ஓய்வு பெறுகிறேன் என்றார்.