ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
காயத்தினால் வெளியேறிய ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிக்கப்பட்டது குறித்து...
சிஎஸ்கேவின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே காயத்தினால் வெளியேறியதால் அவருக்கு மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்டருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை அணியில் எடுத்து ஆச்சரியமளித்துள்ளது.
வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் சிஎஸ்கே அணியினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 18-ஆம் தேதி ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தின்போது ஆயுஷ் மாத்ரே காயம் கண்ட நிலையில், அதிலிருந்து அவா் மீள்வதற்கு 6 முதல் 12 வாரங்கள் தேவைப்படலாம் என்பதால் அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.
Advertisement
Advertisement
ஆகாஷ் மத்வால் இதுவரை 17 போட்டிகளில் 23 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஐபிஎல் 2023ல் 5 விக்கெட்டுகள் எடுத்து 5 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தினார்.
இந்த நிலையில், சிஎஸ்கே அணி பேட்டருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை எடுத்திருப்பது வரவேற்கத்தக்க முடிவாக இருக்கிறது.
Replacement Player Announced for Ayush Mhatre!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.