3-வது ஒருநாள்: வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக மாற்று வீரர் சேர்ப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக விலகியுள்ள வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக மாற்று வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக விலகியுள்ள வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக மாற்று வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லார்ட்ஸ் திடலில் நாளை (ஜூலை 19) நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருப்பதால், தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலிருந்து ஆல்ரவுண்டர் வாஷிங்டர் சுந்தர் காயம் காரணமாக விலகினார். இந்த நிலையில், அவருக்கு மாற்று வீரராக ஹர்ஷ் துபே ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
ஒருநாள் தொடருக்கு முன்பாக, இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய இந்திய அணி அந்த தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்தது. டி20 தொடரை இழந்த நிலையில், ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
A replacement player has been named for Washington Sundar, who has withdrawn from the third ODI against England due to injury.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.