எந்த இடத்தில் களமிறங்கினாலும் எனக்கு மகிழ்ச்சியே: வாஷிங்டன் சுந்தர்
இந்திய அணியில் எந்த இடத்தில் களமிறங்கி விளையாடினாலும் தனக்கு மகிழ்ச்சி என ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் எந்த இடத்தில் களமிறங்கி விளையாடினாலும் தனக்கு மகிழ்ச்சி என ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நேற்று (ஜூலை 14) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தியது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தினார். அவர் 80 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கையில் தசைப்பிடிப்பு காரணமாக பெவிலியன் திரும்பினார். அதன் பின், இங்கிலாந்து அணி குறுகிய இடைவெளியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்தனர்.
Advertisement
Advertisement
இருப்பினும், ஆல்ரவுண்டர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்ஷர் படேல் இடையேயான 100 ரன்களுக்கும் அதிகமான பார்ட்னர்ஷிப் இந்திய அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தது. அக்ஷர் படேல் 57 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 52 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இந்திய அணியில் எந்த இடத்தில் களமிறங்கி விளையாடினாலும் தனக்கு மகிழ்ச்சி என வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: வெவ்வேறு இடங்களில் விளையாடி அணிக்கு என்னுடைய பங்களிப்பை வழங்குவது மிகுந்த உற்சாகமளிக்கிறது. அனைவருக்கும் வெவ்வேறு விதமான ரோல்களில் விளையாட வாய்ப்பு கிடைக்காது. சூழல்களுக்கு ஏற்ப வெவ்வேறு இடங்களில் களமிறங்கி விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அணியின் வெற்றிக்காக என்னுடைய சிறந்த பங்களிப்பை வழங்க எப்போதும் முயற்சி செய்வேன் என்றார்.
All-rounder Washington Sundar has said that he is happy wherever he plays in the Indian team.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.