எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண்கள்: லட்சுமி மேனன்
ஒவ்வொரு தேர்விலும் நான் எதிர்பார்த்ததை விடவும் அதிக மதிப்பெண்களே கிடைத்துள்ளது. தேர்வு கடினமாக இருந்தாலும் திருத்தும்போது தாராளமாக இருந்துள்ளார்கள்.
+2 தேர்வில் 80% மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளார் லட்சுமி மேனன்.
அடுத்து என்ன படிக்கப் போகிறார் என்பதை ஒரு பேட்டியில் கூறியதாவது:
‘எனக்குக் கிடைத்த மதிப்பெண்களால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். ஒவ்வொரு தேர்விலும் நான் எதிர்பார்த்ததை விடவும் அதிக மதிப்பெண்களே கிடைத்துள்ளது. தேர்வு கடினமாக இருந்தாலும் திருத்தும்போது தாராளமாக மதிப்பெண்கள் வழங்கியுள்ளார்கள் என யூகிக்கிறேன்.
Advertisement
பி.காம், ஃபேஷன் டிசைனிங் என இரண்டில் ஒன்று படித்து டிகிரி வாங்கிவிடலாம். ஆனால் நான் ஆங்கில இலக்கியம் படிக்க உள்ளேன். படிப்பு, சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்த இந்தப் படிப்பு உதவும். கேரளாவுக்கு வெளியே படிக்க நேர்ந்தால் அந்த ஊர் உணவு ஒத்துப்போவது சிரமம். மேலும் எனக்கு அடிக்கடி வீட்டு ஞாபகம் வேறு வரும். அதனால் கொச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்க உள்ளேன்’ என்றார்.