சினிமா

நாளை நடிகர் சங்கத் தேர்தல்: ஜெயிக்கப் போவது யார்?

தென்னிந்திய நடிகர்கள் சங்கம் 1952-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். அதன்படி, 2015 முதல் 2018-க்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் நாளை நடைபெறுகிறது.

சநகன்

தென்னிந்திய நடிகர்கள் சங்கம் 1952-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். அதன்படி, 2015 முதல் 2018-க்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் நாளை நடைபெறுகிறது.

2015-2018-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.

சுமார் 3,139 உறுப்பினர்கள் வாக்களித்து நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்வு செய்யவுள்ளனர். நடிகர் சரத்குமார் தலைமையிலான அணியினரும், நடிகர் நாசர் தலைமையிலான அணியினரும் தேர்தலில் களம் காண உள்ளனர். இதற்காக மாவட்ட அளவில் செயல்பட்டு வரும் நாடக அமைப்புகள் மற்றும் திரைப்பட அமைப்புகளை இரு தரப்பினரும் தனித் தனியாக நேரில் சென்று சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர்.

இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 1-ஆம் தேதி தொடங்கி 3-ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்தல் அதிகாரி ஈ.பத்மநாபன் முன்னிலையில் இரு அணியினரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை, வேட்பு மனுக்களை வாபஸ் வாங்குவதற்கான காலக் கெடு முடிவடைந்ததையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியல் அக்டோபர் 8-ம் தேதி வெளியிடப்பட்டது. சரத்குமார் அணி, நாசர் அணி, சுயேச்சைகள் உள்ளிட்ட 61 வேட்பாளர்கள் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். 

தலைவர் பதவிக்கு 3 பேர்: தலைவர் பதவிக்கு சரத்குமார், நாசர் இருவரும் போட்டியிடும் நிலையில் சிவசாமி என்பவரும் தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளார்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு நாசர் அணியின் சார்பில் கருணாஸ், பொன்வண்ணன் இருவரும் போட்டியிடுகின்றனர். சரத்குமார் அணியின் சார்பில் விஜயகுமார், சிம்பு இருவரும் போட்டியிடுகின்றனர். இதைத் தவிர, மோகன்குமார் என்ற சுயேச்சை வேட்பாளரும் போட்டியிடுகின்றார்.

பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவி, விஷால் இருவரும் போட்டியிடும் நிலையில் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடும் சிவசாமி, பொதுச் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணன், கார்த்தி இருவரிடையே போட்டி நிலவுகிறது.

இதைத் தவிர குட்டி பத்மினி, பிரசன்னா, ராஜேஷ், கே.ஆர். செல்வராஜ், ராம்கி, நளினி, நந்தா, விக்னேஷ் உள்ளிட்ட 48 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வாக்குச் சீட்டு எண் (சின்னம்) ஒதுக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சரத்குமாருக்கு ‘2’ என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு அணியின் சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நாசருக்கு ‘1’ என்கிற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களில் ராதாரவிக்கு ‘1’ என்ற சின்னமும், நடிகர் விஷாலுக்கு ‘3’ என்ற சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தபாலில் அனுப்பப்படும் வாக்குச் சீட்டுகள் இன்று மாலை 5 மணி வரை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் பெறப்படும்.

சென்னை மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்களிக்க அனுமதி பெற்றவர்கள் தங்களது அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு வர வேண்டும். நாளை மாலையே வாக்கு எண்ணிக்கையும் தொடங்குகிறது. தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி ஈ.பத்மநாபன் தலைமையில் இந்தத் தேர்தல் பணி நடைபெறுகிறது.

நாடக நடிகர்களின் ஆதரவு உள்ளதால் சரத் குமார் - ராதாரவி அணியே மீண்டும் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இந்தத் தேர்தலையும் நடிகர் சங்கப் பிரச்னைகளையும் மக்கள் முன் கொண்டு சென்றவர் நடிகர் விஷால். அதனால் நாசர் - விஷால் அணிக்கு வாக்களிக்க பலர் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இரு தரப்பிலும் போட்டி நிலவி வருவதால் திரைப்பட வட்டாரம் தவிர்த்து பொதுமக்கள் மத்தியிலும் இந்தத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

”மேஷ ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

SCROLL FOR NEXT