சினிமா

ஹோலி, ரக்‌ஷா பந்தன் அல்ல, பொங்கல் தான் என் பண்டிகை: நமீதா பேட்டி

அரசியல் கட்சிகளிடமிருந்து அழைப்பு வந்தது...

எழில்

என் சொந்த ஊர் குஜராத் என்பதே எனக்கு மறந்து விட்டது. ஹோலி, ராக்கி, ரக் ஷாபந்தன் எல்லாம் மறந்து விட்டது. இங்கு கொண்டாடப்படும் பொங்கல்தான் என் பண்டிகையாக உள்ளது. தமிழ்நாடு, சென்னையை விட்டுச் செல்லமாட்டேன் என்று நடிகை நமீதா கூறியுள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

'என் எடை அதிகமாகிக்கொண்டே போனது. பட வாய்ப்புகளும் குறைந்தன. நான் மிகவும் மனச்சோர்வுக்கு ஆளானேன். என் வருத்தமும் மன உளைச்சலும் எளிதில் விளக்கிட முடியாதவை. எடையைக் குறைக்க பல விதங்களில் முயற்சி செய்து பார்த்தேன். பல சிகிச்சை முறைகளைப் பின்பற்றினேன். ஆனால் பலனில்லை.

மிகவும் வெறுத்துப் போய்விட்டேன். எடையை எப்படியாவது குறைத்தாக வேண்டும், வாழ்வா சாவா என்கிற போராட்டம் தான் இது. அப்படிப்பட்ட சூழலில்தான் சாக் ஷி வெல்னஸ் பற்றி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மூலம் கேள்விப்பட்டேன்.

எனக்கு முதலில் நம்பிக்கை வரவில்லை. ஏனென்றால் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் எடைமட்டும் குறையாததால் இந்த புது முயற்சி மீது நம்பிக்கை வரவில்லை. அல்ட்ரா சவுண்ட் ரேடியோ பிரிக்குவன்ஸி முறையில் முதலில் ஒன்றரை கிலோ எடை குறைந்தபோது எனக்கே அது அதிர்ச்சியாக இருந்தது. பிறகுதான் நம்பிக்கை வந்தது. இம்முறையில் கொழுப்பு செல்களை  அழித்து வியர்வையாக வெளியேற்றப்படுகிறது. இதன்படி மூன்றே மாதங்களில் சுமார் 20 கிலோ எடை குறைத்தேன் (18 கிலோ). இப்போது இந்த சிகிச்சையை மற்றவர்களுக்கும் சிபாரிசு செய்கிறேன். அவர்களுக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் ஆகிவிட்டேன்.

என்னை இப்போது பார்ப்பவர்கள்  என் உணவுமுறை பற்றிக் கேட்கிறார்கள். அரிசி உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட்டேன். காபி, டீ, கிடையாது. நான் ஒரு பீட்ஸாப் பிரியை. பீட்ஸா டோமினோவில் பிளாட்டினம் மெம்பர் நான், அந்த அளவுக்கு பீட்ஸா சாப்பிடுவேன். ஆனால் இப்போது மாதம் ஒன்றுதான் சாப்பிடுகிறேன்.

இனி நல்ல பட வாய்ப்புகள் வரும் என்கிற நம்பிக்கை உண்டு. ஆக் ஷன் நாயகியாக நடிக்க விரும்புகிறேன்.

எனக்கு அரசியலில் ஆர்வம், ஈடுபாடு உண்டு. நிச்சயமாக அரசியலில் ஈடுபடுவேன். பல கட்சிகளிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனால் எப்போது அரசியலில் இறங்குவேன் என்று இப்போது சொல்ல முடியாது.

என் சொந்த ஊர் குஜராத் என்பதே எனக்கு மறந்து விட்டது. ஹோலி, ராக்கி, ரக் ஷாபந்தன் எல்லாம் மறந்து விட்டது. இங்கு கொண்டாடப்படும் பொங்கல்தான் என் பண்டிகையாக நினைவுக்கு வருகிறது. தமிழ்நாடு, சென்னையை விட்டுச் செல்லமாட்டேன்’ என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

தி.மு.க.வுக்கு இது ‘மாநாடு மாதம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT