சினிமா

படமாக மாறும் சர்ச்சைக்குரிய அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாறு

AnandhBabu

பிரதமர் நரேந்திர மோடி, மன்மோகன் சிங், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, என்.டி.ராமாராவ் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக வந்துள்ள நிலையில், தற்போது ஜனதா தளக் கட்சியின் தலைவரும், பீஹார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக உருவாக  உள்ளது.

போஜ்புரி நடிகர் யாஷ்குமார், லாலு பிரசாத் யாதவாக நடிக்கும் இப்படத்திற்கு லான்டன் (லாந்தர் விளக்கு) என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் லாலு பிரசாத்தின் மனைவி ரப்ரி தேவியாக நடிகை ஸ்மிரிதி சின்ஹா நடிக்கிறார். 

பீஹார் மற்றும் குஜராத் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பானது நடைபெற்றுள்ளதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இப்படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

லாந்தர் விளக்கு (லான்டன்) என்பது லாலு பிரசாத் யாதவின் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் சின்னம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT