சினிமா

விரைவில் சந்திரமுகி இரண்டாம் பாகம்?

பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு உள்ளிட்டோர் நடித்த சந்திரமுகி கடந்த 2004-ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது.

DIN

பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு உள்ளிட்டோர் நடித்த சந்திரமுகி கடந்த 2005-ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. அண்மையில் ஒரு பேட்டியில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் ஆசையை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளிப்படுத்தினார்.

ஆனால் இயக்குநர் பி.வாசு சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தை ஆப்த ரட்சகா என்ற கன்னடப் படமாக எடுத்துள்ளாராம்.  மேலும் தமிழில் இதையெடுக்க முயற்சித்து வருவதாகவும் அதற்கான ஆரம்பப் பணிகளைத் தொடங்கிவிட்டதாகவும் அண்மையில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இதற்கான அறிவிப்பு அதிகாரபூர்வமான விரைவில் வரும் என்றனர். 

இந்தப் படத்தின் கதையை இன்னும் மெருகேற்றி ஒரு தமிழ் ஹீரோவிடம் சொல்லி இருக்கிறேன். ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்திடமும் சொல்லி விட்டேன். சந்திரமுகி படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கிறோம். முதற்கட்ட வேலைகள் நடைபெறுகின்றன. அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றார். ஆனால் ரஜினி ஏற்று நடித்த சரவணன் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்று முடிவு செய்யப்படவில்லை. சந்திரமுகி 2 குறித்த எதிர்ப்பார்ப்பு கோலிவுட்டில் உருவாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT