நடிகர் ஜெய் பிறந்தநாள்: இன்ப அதிர்ச்சியளித்த சிம்பு!
நடிகர் ஜெய் பிறந்தநாளையொட்டி அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று கேக் வெட்டி நடிகர் சிம்பு வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர் ஜெய் பிறந்தநாளையொட்டி அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று கேக் வெட்டி நடிகர் சிம்பு வாழ்த்து தெரிவித்தார்.
அதற்கு நன்றி தெரிவித்து நடிகர் ஜெய் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் பரவலாக பரவி வருகின்றன. அதனை ஷேர் செய்து ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பகவதி திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தம்பியாக அறிமுகமான ஜெய், கோவா, எங்கேயும் எப்போதும், ஜருகண்டி, கேப்மாரி உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதனிடையே இன்று அவர் தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அவரது ரசிகர்கள் நேரிலும், சமூக வலைதளத்திலும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சிம்பு ஜெய் வீட்டிற்கு நேரடியாக சென்று வாழ்த்து தெரிவித்தார்.
அவரது வீட்டில் கேக் வெட்டி ஜெய்-யின் குடும்பத்துடன் அவரது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் ஜெய் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
சிம்புவின் வருகை எதிர்பாராதது. மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. எனக்காக உங்கள் நேரத்தை செலவிட்டமைக்கு மிகுந்த நன்றி. இந்த நாளை சிறப்பாக மாற்றியதற்காக நன்றி நண்பா என்று பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.