சினிமா

கருத்து சுதந்திரத்தின் மீதான பேரிடி: ஒளிப்பதிவு வரைவு மசோதாவை எதிர்க்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

DIN

மத்திய அரசின் ஒளிப்பதிவு வரைவு மசோதா நிறைவேற்றப்பட்டால் அது கருத்து சுதந்திரத்தின் மீதான பேரிடியாக அமைந்துவிடும் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஒளிப்பதிவு திருத்த மசோதா 2019  கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாநிலங்களவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்ட அந்த மசோதாவானது கடந்தாண்டு மாா்ச் மாதம் அறிக்கையை சமா்ப்பித்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் நடப்பாண்டு இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்தத் திருத்த மசோதா நிறைவேறினால் ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்களை மீண்டும் தணிக்கை செய்ய முடியும்.

மேலும், திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்படவும் வாய்ப்பளிக்கிறது.

இந்த மசோதா குறித்து கடந்த சில நாள்களாக திரைப்படத் துறையினா் கருத்துகளை தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “ ஒளிப்பதிவு வரைவு மசோதா சட்டமானால் அது கருத்து சுதந்திரத்தின் மீதான பேரிடியாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு இதனை திரும்பப்பெற வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 முன்னதாக திரைப்பட நடிகர் சூர்யா ஒளிப்பதிவு வரைவு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

SCROLL FOR NEXT