அருள்நிதி நடிக்கும் தேஜாவு - முதல் பார்வை போஸ்டர் வெளியீடு 
சினிமா

அருள்நிதி நடிக்கும் தேஜாவு - முதல் பார்வை போஸ்டர் வெளியீடு

அருள்நிதியின் பிறந்தநாளில் ( நேற்று ) அவருடைய அடுத்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியிருக்கிறது. 

DIN

அருள்நிதியின் பிறந்தநாளில் ( நேற்று ) அவருடைய அடுத்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியிருக்கிறது. 

நடிகரும் தயாரிப்பாளருமான அருள்நிதி இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் நடித்துள்ள 'டைரி' திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருந்த நிலையில் தன்னுடைய அடுத்த படத்திற்கான முதல் பார்வை போஸ்டரையும்  வெளியிட்டார் .  

அப்படத்திற்கு ' தேஜாவு ' எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.  த்ரில்லர் கதையாக உருவாகிவரும் ' தேஜாவு' படத்தை அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்குகிறார். மதுபாலா, ஸ்மிருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் உள்ளிட்ட பலர் அருள்நிதியுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக பி.ஜி.முத்தையா, இசையமைப்பாளராக ஜிப்ரான், எடிட்டராக அருள் சித்தார்த் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, தமன் ஆகியோர் இணைந்து 'தேஜாவு' படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார்கள். இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ளது. தெலுங்கில் அருள்நிதி கதாபாத்திரத்தில் நவீன் சந்திரா நடித்திருக்கிறார்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் 9 கட்சிகள் இணைந்தன! நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உதயம்!

எஸ்.ஐ.ஆரில் குளறுபடி; பல லட்சம் வாக்குகள் நீக்கப்படும் அபாயம்! - திமுக குற்றச்சாட்டு

அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்: 7 பேர் பலி, 11 பேர் காயம்!

முதல் 100 செயலிகளின் பட்டியலில் எங்கே போனது ஸோஹோவின் அரட்டை?

ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பையை அறிமுகப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT