சினிமா

ரன்வீர் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்த ஆலியா பட்

நடிகர் ரன்வீர் சிங் பகிர்ந்த நிர்வாண புகைப்படத்திற்கு நடிகை ஆலியா பட் ஆதர்வு தெரிவித்துள்ளார். 

DIN

நடிகர் ரன்வீர் சிங் பகிர்ந்த நிர்வாண புகைப்படத்திற்கு நடிகை ஆலியா பட் ஆதர்வு தெரிவித்துள்ளார். 

நடிகர் ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூலை 21 அன்று நிர்வாணமாக இருக்கும் படங்களைப் பதிவிட்டிருந்தார். அவரது அந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது செயலுக்கு எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில் அர்ஜூன் கபூர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துவருகின்றனர். தற்போது அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. 

ஆலியா பட் ரன்வீர் சிங் சேர்ந்து நடித்த கல்லி பாய் (Gully boy) திரைப்படம் பெரும் வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது. 

பிரபல ஹிந்தி நடிகை ஆலியா பட் தன்னுடைய ஆதரவினை தெரிவித்துள்ளார். ஆலியா கூறியதாவது: 

என்னுடன் நடித்த எனக்கு பிடித்தமான நடிகரைப் பற்றி நான் எதுவும் எதிர்மறையாக கூற மாட்டேன். அதனால் இதுப்பற்றி கேள்வி கேட்பதே பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். எல்லோருக்குமே அவர் பிடித்தமான நடிகர். அவர் படத்தில் அவர் அதிகமாகவே கொடுத்து விட்டார். நாம் அவருக்கு அன்பை மட்டுமே திருப்பி செலுத்த வேண்டும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 10,850 கன அடியாக சரிவு!

இன்னும் எத்தனை காலம்... பாம் புதிய பாடல்!

தவெக தொண்டர்கள் மறைவுக்கு விஜய் இரங்கல்!

பாரதிராஜா நடிக்கும் புலவர் படத்தின் முதல் பார்வை வெளியீடு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT