சினிமா

‘4 எலும்பு கிடைத்தால் போதும் அவர்களது ஜாதகத்தையே எழுதிடுவேன்’ - அமலா பாலின் புதிய அவதாரம்  

அமலா பால் தயாரித்து நடித்திருக்கும்  ‘கடாவர்’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. 

DIN

அமலா பால் தயாரித்து நடித்திருக்கும்  ‘கடாவர்’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. 

முதன் முறையாக தாயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் நடிகை அமலாபாலின் புதிய படம் ‘கடாவர்’. இப்படத்தினை தயாரித்து அவரே நடித்துள்ளார். அபிலாஷ் பிள்ளை எழுதியிருக்கும் இப்படத்தினை அனுப் எஸ் பானிக்கர் இயக்கியுள்ளார். 

இப்படத்தில் ஹரிஷ் உத்தமன், அதுல்யா, ரித்விகா முனிஷ் காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் அமலா பால் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ‘4 எலும்பு கிடைத்தால் போதும் அவர்களது ஜாதகத்தையே எழுதிடுவேன்’ என்று வசனம் பேசுவதிலேயே அவர் தலைமை காவலர் அறுவை சிகிச்சை நிபுணர் ஆக நடித்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. த்ரில்லர் வகையிலான படமாக எடுக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 12ஆம் நாள் நேரடியாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஹாட் ஸ்டாரில் காணலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT