துப்பாக்கி பிடித்தபடி மாஸாக உள்ள விஜய் 
சினிமா

துப்பாக்கி பிடித்தபடி மாஸாக உள்ள விஜய்...அதிர வைத்த புதிய அப்டேட் 

விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்திலிருந்து இதுவரை வெளியிடாத புகைப்படம் ஒன்றை 3 மணி நேரத்தில் வெளியிடுவோம் என சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. 

DIN

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படம் 5 மொழிகளில் வெளியாவதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. 

படத்திலிருந்து ஏற்கெனவே வெளியான இரண்டு பாடல்களும் பெரிதளவில் ஹிட் அடித்துள்ளன. இசை வெளியீட்டு விழா இல்லாததால், ரசிகர்களுக்குப் புதிதாக அப்டேட் கொடுக்க வேண்டிய நிலையில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உள்ளது.

பீஸ்ட் படத்துடன் திரையரங்குகளில் கேஎஜிஎஃப் இரண்டாம் பாகமும் வெளியாகிறது. இதன் டிரெய்லர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியாகிறது.

இதற்கு போட்டியாக, பீஸ்ட் படத்திலிருந்து இதுவரை வெளிவராத புகைப்படத்தினை இன்னும் 3 மணி நேரத்தில் வெளியிடுவோம் என சன் பிக்சர்ஸ் அறிவித்தது.

அந்த வகையில், துப்பாக்கியை பிடித்தபடி மாஸான லுக்கில் விஜய் போஸ் கொடுக்கும்படியான புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT