முகப்பு
சினிமா

ஹிந்தியில் அமலா பால்!

பிரபல தென்னிந்திய நடிகை அமலா பால், ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

பிரபல தென்னிந்திய நடிகை அமலா பால், ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபகாலமாக பாலிவுட் நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகும் ஹிந்தி படங்கள் தோல்வியை சந்தித்து வருகின்றது. இதனால், பாலிவுட் திரைத்துறையினர் அதிருப்தியில் உள்ளனர்.

இதற்கிடையே, தென்னிந்திய திரைப்படங்களான கே.ஜி.எஃப்., விக்ரம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் வட இந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனால், தென்னிந்திய நடிகர்கள் பாலிவுட்டில் நேரடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற கைதி படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘போலா’ படத்தில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை அஜய்தேவ்கானே இயக்கி நடிக்கவுள்ளார்.

ஏற்கெனவே, பாலிவுட்டில் திரிஷா நடித்துள்ள நிலையில், ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். பேம்லி மேன் தொடர் மூலம், ஹிந்தியில் அறிமுகமான சமந்தாவுக்கும் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த வரிசையில் தற்போது அமலா பாலும் இணைந்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →