சினிமா

சிம்புவின் ‘பத்து தல’ வெளியீடு குறித்து புதிய அப்டேட்

சிம்பு நடிப்பில் வெளியாகவுள்ள பத்து தல திரைபடத்தின் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

DIN

சிம்பு நடிப்பில் வெளியாகவுள்ள பத்து தல திரைபடத்தின் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. இந்தப் படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். 

கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 

இந்தப் படத்தின் பாடல் காட்சி ஒன்று ஹைதராபாத்தில் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றது. இன்னும் 8 நாள்களில் படத்தின் முழுப் பணிகளும் நிறைவடைந்துவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நவம்பர் மாதம் மத்தியில் பட வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும், ஜனவரி அல்லது பிப்ரவரியில் திரையரங்குகளில் படம் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT