சினிமா

மார்வெலின் புதிய தொடர் "எக்கோ" - டிரைலர் வெளியானது!

மார்வெல் ஸ்டூடியோஸின் புதிய தொடரான "எக்கோ"வின் டிரைலர் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது.

DIN

''எக்கோ' டிரைலரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த மார்வெல் நிறுவனம் "எந்த ஒரு கெட்ட செயலும் தண்டிக்கப்படாமல் போவதில்லை" என்ற சொற்றொடரையும் பகிர்ந்துள்ளது. இந்த தொடர் வரும் ஜனவரி 10ஆம் தேதியன்று டிஸ்னி+ மற்றும் ஹுலூ-வில் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடர் ஹூலூ-வில் ஏப்ரல் 9ஆம் தேதி வரை மட்டுமே இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மார்வெல் நிறுவனத்திலிருந்து டி.வி-எம்.எ(TV-MA) மதிப்பீட்டுக்கு தகுதிபெறும் முதல் தொடராக 'எக்கோ' தொடர் உள்ளது. டி.வி-எம்.எ (TV-MA) என்பது மெச்சூர் ஆடியன்ஸ்(Mature audience) அதாவது குழந்தைகள் அல்லாத பார்வையாளர்களுக்காக தயாரிக்கப்படும் தொடர்களுக்கு வழங்கப்படும் மதிப்பீடு ஆகும். இந்த தொடர் குழந்தைகளுக்காக எடுக்கப்பட்டது அல்ல என மார்வெல் தெரிவித்துள்ளது. 

இதில் நடிகை அலாகுவா காக்ஸ், எக்கோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிங்பின் எனும் மார்வெலின் மிகப்பெரிய மாஃபியா கூட்டத்தின் தலைவனது வளர்ப்பு மகளாக வரும் காது கேளாத 'எக்கோ' கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே பெறும் ஆவலைத்தூண்டியுள்ளது. எக்கோ கதாப்பாத்திரம் ஏற்கனவே ஹாக்கை(Hawkeye) தொடரில் மாயா லோப்பெஸ்-ஆக அறிமுகமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு!

பிரிட்டனின் அரச நெறிமுறைகளை மீறினாரா அதிபர் டிரம்ப்?

தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறது; ஆனால், பதில் எங்கே? - காங்கிரஸ் கேள்வி

விஜய்யின் சுற்றுப் பயண பிரச்னையிலேயே குட்டிக்கரணமிடும் தவெக: அண்ணாமலை விமர்சனம்

புரட்டாசி மாதப் பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT