இயக்குநர் ராஜு முருகன் மற்றும் எஸ்பி சினிமாஸ் வழங்கும் 'பராரி’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியானது.
'குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி', 'ஜப்பான்' போன்ற பல படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன் எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் 'பராரி'.
இந்நிலையில் ராஜு முருகனிடம் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இயக்குநராக அறிமுகமாகும் பராரி திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேளியிட்டுள்ளார்.
பிழைப்பிற்காக தங்களது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயரும் மக்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ‘தோழர் வெங்கடேசன்’ படத்தில் நடித்து கவனம் ஈர்த்த ஹரிசங்கர் கதாநாயகனாகவும், புதுமுகம் சங்கீதா கல்யாண் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். பரியேரும் பெருமாள் படத்திற்க்கு ஒளிப்பதிவு செய்த ஸ்ரீதர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.