சினிமா

நக்சல் ஸ்டோரி..! கேரளா ஸ்டோரி இயக்குநரின் புதிய படம்!

கேரளா ஸ்டோரி படத்தை இயக்கிய சுதிப்தோ சென், புதிதாக பஸ்தார்  தி நக்சல் ஸ்டோரி எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பைத் துவங்கியுள்ளார்.

DIN

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ஆம் தேதி தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் கேரளத்தில் ஹிந்து பெண்கள் கட்டாயத்தின்பேரில் மதமாற்றம் செய்யப்பட்டு இஸ்லாமிய பயங்கரவாதிகளிடம் சிக்கிக்கொள்வதைப்போல்  திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், ஒரு சில மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி திரையிடலுக்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும் மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மீண்டும் திரையிடப்பட்டது.

நாடு முழுவதும் இந்த திரைப்படம் சுமார் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, தி கேரளா ஸ்டோரி தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இணைந்து ‘பஸ்தார்’ என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டிருந்தனர்.

மேலும், இந்த திரைப்படமானது நாட்டையே புரட்டி போடக்கூடிய மறைக்கப்பட்ட உண்மை சம்பவம் குறித்தது என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் அதிகளவில் உள்ள பகுதி பஸ்தார். எனவே நக்சல் குறித்த திரைப்படமாக இது இருக்கலாம். மேலும், போஸ்டரில் கம்யூனிஸ்ட் கொடி இடம்பெற்றுள்ளதால், அவர்களை சம்பந்தப்படுத்தி திரைக்கதை அமைய வாய்ப்புள்ளது எனக் கருத்தப்பட்டது. 

இந்நிலையில், படக்குழு ‘பஸ்தார் தி நக்சல் ஸ்டோரி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளது. தி கேரளா ஸ்டோரி படத்தின் நாயகியான ஆதா சர்மா, இப்படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.

பஸ்தார் 2024 ஏப்ரல் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுக படத்திலேயே ஆச்சரியம்... சய்யாரா வசூல் எவ்வளவு தெரியுமா?

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

SCROLL FOR NEXT